நிலக்கோட்டை: திண்டுக்கல்லில் தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் ரயில் மோதி பலி
திண்டுக்கல் கொடைரோடு அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ராமராஜபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (68) என்பவர் தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.