பென்னாகரம்: தருமபுரி காரிமங்கலம் நகைக்கடையில் திருட்டு: சிசிடிவி மூலம் சிக்கிய பெண் கைது!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் நகைக்கடையில் விற்பனையாளரை ஏமாற்றி 10 கிராம் தங்க நாணயத்தைத் திருடிய கவிதா என்ற பெண் கைது செய்யப்பட்டார். ஆம்பூரைச் சேர்ந்த அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.