திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல்லில் மாபெரும் விபத்து மீட்பு ஒத்திகை: ஆட்சியர் துர்காமூர்த்தி நேரடி ஆய்வு
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் உலக உடற்காய தினத்தை முன்னிட்டு விபத்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீட்புப் பணிகள் மற்றும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.