கோவை வடக்கு: கோவையில் கோலாகலமாக நடைபெற்ற கிட்-அ-தான்: நீரிழிவு பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு நிதியுதவி
கோவையில் டைப் 1 நீரிழிவு நோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணமான 'கிட்-அ-தான்' நடைபெற்றது. இதில் 1,350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவச் செலவிற்காக 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.