திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் 2 மணி நேரமாக கனமழை: மகிழ்ச்சியில் மக்கள்!
திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக நிலவி வந்த வெயிலின் தாக்கத்திற்கு மத்தியில், இன்று இரவு 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.