திருவாடனை: தொண்டி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநரைத் தாக்கி மயக்கமடையச் செய்த முகம்மது ரிபாக் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.