அரியலூர்: குழுமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.80 கோடியில் புதிய கட்டடம்!
அரியலூர் மாவட்டம், குழுமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டடம் கட்டப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி அவர்கள் தெரிவித்துள்ளார். 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் இந்த புதிய கட்டடம் அமைய உள்ளது.