அரியலூர்: அரியலூர் சிலுப்பனூர் தாக்குதல்: குற்றவாளிகள் கைது - விசிக நன்றி!
அரியலூர் மாவட்டம் சிலுப்பனூர் கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி விசிகவினர் மாவட்ட எஸ்பியிடம் கோரிக்கை விடுத்தனர். தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து, காவல் நிர்வாகத்திற்கு விசிகவினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.