நாமக்கல்: அரசு வழங்கிய பட்டா போலி என ஆட்சியர் கூறியதால் மக்கள் போராட்டம்
நாமக்கல் குப்பம்பாளையத்தில் அரசு வழங்கிய பட்டா போலி என ஆட்சியர் கூறியதாகக் கூறி, வீடுகளை இழந்த மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 1998-ல் வழங்கப்பட்ட பட்டா நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பால் 5 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் இப்போராட்டம் நடைபெறுகிறது.