பெரியகுளம்: பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழை
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இன்று மாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்துள்ளது. கடும் வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த மழை குளிர்ச்சியைத் தந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.