தேனி: தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி: வெள்ளை சாத்தி அலங்காரத்தில் முருகன் தரிசனம்
Theni, Theni | Nov 14, 2026 தேனி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் 4-ஆம் நாளை முன்னிட்டு, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கந்த சஷ்டி பாராயணம் பாடி வழிபாடு செய்தனர்.