திருநெல்வேலி: நெல்லை: மூதாட்டியிடம் 13 பவுன் நகை பறிப்பு - தவெக நிர்வாகி அதிரடி நீக்கம்
நெல்லையில் 70 வயது மூதாட்டியிடம் 13 பவுன் நகையைப் பறித்த வழக்கில் கைதான தவெக தொண்டரணி நிர்வாகி இசக்கிராஜா, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.