செங்கம்: செங்கம் மண்மலை பாரதி நகரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்; விஷ ஜந்துக்களால் மக்கள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மண்மலை கிராமம், பாரதி நகரில் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பால் வீடுகளுக்குள் மழைநீர் தேங்குகிறது. விஷ ஜந்துக்களால் அவதிப்படும் மக்கள், நோய் தொற்று பரவாமல் தடுக்க கால்வாயைச் சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.