கே.வி.குப்பம்: வேலூர்: கே.வி.குப்பம் அருகே வெடிமருந்து கிடங்கு வெடித்து தரைமட்டம்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே அர்ஜுனாபுரத்தில், பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசு மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு வெடித்து சிதறியது. இதில் கட்டிடம் தரைமட்டமானதோடு 3 மினி வேன்கள் சேதமடைந்தன. கன்றுக்குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.