திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த, பாண்டியராஜபுரம் நான்கு வழிச்சாலையில் இருந்து, பள்ளப்பட்டி, சிலுக்குவார்பட்டி, நிலக்கோட்டை வரை சுமார் 10 கிலோ மீட்டருக்கு மேல் சாலை கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் மழை காலங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.