வேடசந்தூர்: கல்வார்பட்டியில் சாலையோரத்தில் கவிழ்ந்த உப்பு லாரி
தூத்துக்குடியில் இருந்து உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கர்நாடகாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை தர்மபுரியை சேர்ந்த கிருஷ்ணன் ஓட்டி சென்றார். லாரி வேடசந்தூர் அடுத்த கல்வார்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது லாரியை முந்தி சென்ற வேன் லாரியில் உரசுவது போல் வந்ததால் லாரி டிரைவர் லாரியை வேன் மீது மோதாமல் இருக்க திருப்பி உள்ளார். இதில் லாரி நான்கு வழிச்சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புக் கற்களை உடைத்துக் கொண்டு இணைப்புச்சாலை அருகே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் விழுந்தது.