விருத்தாசலம்: விருதாச்சலம்,ராஜேந்திரப்பட்டினம், ஆலிச்சிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
கடலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து விருத்தாசலம் பகுதியில் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் தேமுதிக மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்று ராஜேந்திர பட்டினம், வண்ணாங்குடிகாடு, வேட்டக்குடி, டி.வி புத்தூர், கருவேப்பிலங்குறிச்சி, நேமம், ஆலந்துறைப்பட்டு, உச்சிமேடு, சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்குகளை சேகரித்தார்