பாளையங்கோட்டை: திருநெல்வேலி: சிறப்பான பணி புரிந்த 85 காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய 85 காவல் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.