நாகப்பட்டினம்: நாகூரில் 3 நாட்களாக வீணாகும் குடிநீர்: குழாய் உடைப்பால் பொதுமக்கள் அவதி
நாகூர் விஐபி நகரில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் 3 நாட்களாக தண்ணீர் வீணாகிறது. இதனால் சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.