அணைக்கட்டு: வேலூர்: கஞ்சா போதையில் கத்தியுடன் ஊருக்குள் புகுந்து பெண்களை மிரட்டிய இளைஞர்கள்!
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே இரு கிராமங்களுக்கு இடையேயான முன்விரோதம் காரணமாக, கஞ்சா போதையில் கத்தியுடன் ஊருக்குள் புகுந்த இளைஞர்கள் பெண்களை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.