விருத்தாசலம்: விருத்தாச்சலம் பாலக்கரை அருகே இந்து மக்கள் கட்சியின் ஆலோசனைக்கூட்டத்தில் விருத்தாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்ககோரி தீர்மானம் நிறைவேற்றம்
விருத்தாச்சலத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாச்சலம் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். விருத்தகிரீஸ்வரர் கோவில் சுற்றி நான்கு புறமும் உள்ள அசைவ உணவு உணவகங்களை அகற்ற வேண்டும்.கோவிலுக்குள் பக்தர்கள் பயன்படுத்துகின்ற கழிப்பறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது