விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழாவில் விடையாற்றி உற்சவத்தில் காய்கனி அலங்காரத்தில் சுவாமி அருள் பாலிப்பு
உலகப் புகழ் பெற்ற விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன்படி விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா மற்றும் தெப்பல் உச்சம் உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விடையாற்றி உற்சவம் மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சிறப்பாக காய் கனி அலங்காரத்தில் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.