விருத்தாசலம்: விருத்தாசலத்தில் காய்கறி மார்கெட்டில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு 'சீல்'
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு இயங்கி வரும் காய்கறி கடைகளில் வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பி எச்சரித்தனர். ஆனால், இதுவரை பலர் வாடகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதன் காரணமாக வருவாய் ஆய்வாளர் ஷகிலாபானு தலைமையில் வாடகை செலுத்தாத 3 காய்கறி கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.