விருத்தாசலம்: சித்திரை சாவடியில் வாகன தணிக்கையின் போது போலீசாரை தாக்கி தப்பியோடிய நபர்கள் - சிசிடிவி, மோப்பநாய் கொண்டு தீவிர விசாரணை
சித்திரைச்சாவடி பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சென்னையில் இருந்து வந்த கார் ஒன்றை மடக்கி விசாரணை நடத்தினர். அந்த காரில் வந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து காவலர்களை தாக்கி அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து போலீசார் மோப்பநாய் கொண்டும் சிசிடிவி காட்சிகளை வைத்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.