செங்கம்: செங்கம் அருகே லாரி - வேன் நேருக்கு நேர் மோதல்: ஓட்டுநர் படுகாயம்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பழைய குயிலம் கூட்டு சாலையில் லாரியும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் ஈச்சர் வேன் ஓட்டுநர் காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். செங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.