வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நீக்க முயற்சிப்பதாகக் கூறி, வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமூக நீதியைக் காக்க ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.