அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா ஐஏஎஸ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பேருந்து நிலையத்தின் அடிப்படை வசதிகள், தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், பயணிகளுக்கு இடையூறின்றி பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.