வேலூர்: தீபாவளி பட்டாசு குப்பைகளை அகற்றும் பணி தீவிரம் - 2000 பணியாளர்கள் களத்தில்
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் தீபாவளி பட்டாசு குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. 2000 தூய்மை பணியாளர்கள் மூலம் சாலைகளில் உள்ள குப்பைகள் முன்னுரிமை அடிப்படையில் அகற்றப்பட்டு வருகின்றன. பண்டிகையையொட்டி கூடுதலாக 5 முதல் 6 டன் குப்பைகள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.