பெரம்பலூர்: பள்ளி மாணவர் விடுதிகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பென்னக்கோணம் மற்றும் சு.ஆடுதுறை அரசு பள்ளி மாணவர் விடுதிகளில் மாவட்ட ஆட்சியர் திரு.ப.அப்துல் ராசிக் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் உணவு தரம் குறித்து ஆய்வு செய்தார்.