வேலூர்: வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்ட 6 திருக்குடைகள்: களைகட்டிய திருக்குடை விழா!
வேலூர் ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்திலிருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 6 திருக்குடைகள் எடுத்துச் செல்லும் விழா நடைபெற்றது. இதில் மேயர் சுஜாதா, அர்ஜுன் சம்பத் மற்றும் பல சாதுக்கள் கலந்து கொண்டனர். இந்த திருக்குடைகள் இன்று திருவண்ணாமலை ஆலயத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.