தூத்துக்குடி: தூத்துக்குடியில் 7000-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தம்: புயல் எச்சரிக்கையால் மீனவர்கள் தவிப்பு
புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 240 விசைப்படகுகள், 2000 நாட்டுப் படகுகள் மற்றும் 5000 பைபர் படகுகள் கடலுக்குச் செல்லாமல் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 13, 14 தேதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீன்வளத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.