பாலக்கோடு: நில இழப்பீடு வழங்காததால் மண்ணெண்ணெய் ஊற்றி விவசாயி தற்கொலை முயற்சி
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால், விவசாயி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். கெயில் கேஸ் பைப்லைன் பணிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதில் ஏற்பட்ட பிரச்சனையால் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.