பண்ருட்டி: தவாக தலைவர் வேல்முருகனை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள தொல்.திருமாவளவன், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் ஆகியோர், தவாக தலைவர் வேல்முருகனை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்ததாக முகநூலில் பதிவிட்டுள்ளார்.