குடியாத்தம்: குடியாத்தம் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபரை கரடி கடித்தது - மருத்துவமனையில் சிகிச்சை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மோர்தானா அருகே ஆடு மேய்க்கச் சென்ற ராஜகிரி என்ற வாலிபரை கரடி கடித்து குதறியது. கை மற்றும் கால்களில் காயமடைந்த அவர், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.