திருப்பூர் தெற்கு: திருப்பூர் பேருந்து நிலையத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீட்பு!
திருப்பூர் மத்திய பேருந்து நிலையக் கட்டிடத்தின் மேல் ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை, ஓட்டுநர்கள் மற்றும் போலீசார் சாதுர்யமாக மீட்டனர். குடிபோதையில் இருந்த அந்த வாலிபர், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து தெற்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.