அரியலூர்: 550 மாணவ மாணவிகள் பங்கேற்ற பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டி
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் பேரறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் இன்று தொடங்கின. மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்த இந்தப் போட்டியில் 13, 15, 17 வயது பிரிவுகளில் 550-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.