பரமக்குடி: திருவாடானையில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் அனுசரிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 69-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு, கொடி ஏற்றப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.