கெங்கவல்லி: பனங்காட்டு பகுதியில் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களிடம் திமுகவினர் வாக்கு சேகரிப்பு
கெங்கவல்லி அருகே பனங்காட்டு பகுதியில் புனித ரமலான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களிடம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனுக்கு ஆதரவாக திமுகவினர் வாக்கு சேகரித்தனர். அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய, நகர செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.