திண்டுக்கல் மேற்கு: திண்டுக்கல் அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பி: 2 பசுமாடுகள் மின்சாரம் தாக்கி பலி!
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் கணபதி நகரில் ஓடையில் தண்ணீர் குடிக்கச் சென்ற 2 பசுமாடுகள், அறுந்து கிடந்த மின்சார வயரில் சிக்கி உயிரிழந்தன. மின்வாரிய ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.