கோவில்பட்டி: முடுக்கு மீண்டான் பட்டி கிராமத்தில் மாடசாமி கோவில் மற்றும் மயானம் ஆகியவற்றை மறித்து தனிநபர் சுவர் எழுப்புவதை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கு மீண்டான் பட்டி கிராமத்தில் மாடசாமி திருக்கோவில் மற்றும் மயானம் உள்ளது. இந்நிலையில் கோவில் மற்றும் மயானத்தை மறித்து தனி நபர் சுவர் கட்டி வருகிறார். இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் தீர்வு காணும் வரை ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.