திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் புகுந்த 6 அடி சாரைப்பாம்பு: நோயாளிகள் அதிர்ச்சி
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மரத்தில் பதுங்கியிருந்த 6 அடி சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். மருத்துவமனை வளாகத்தில் மண்டி கிடக்கும் புதர்களாலும், இடிபாடுகளாலும் பாம்புகள் வருவதாகக் கூறி, நிர்வாகம் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.