பெரியகுளம்: மஞ்சளார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் தேனி மஞ்சளார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. இதனால் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.