செங்கல்பட்டு: அச்சிறுப்பாக்கம்: பிரச்சாரத்திற்கு வந்த தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு, 50 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.