பண்ருட்டி: ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர் தவாக தலைவரும்,எம்எல்ஏவுமான வேல்முருகனை காடாம்புலியூரில் அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர
இது குறித்து அவர் முகநூல் பதிவில்,ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் என்னை நேரில் சந்தித்து தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களுக்கு துணை நிற்பதற்காகவும், அதற்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வருவதற்காகவும் சென்ற ஆட்சியில் அந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்திக்க சென்ற நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்தனர் என கூறியுள்ளார்