முசிறி: மேட்டுப்பட்டி எல்லை கோவிலில் பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் பிரச்சாரத்தை துவங்கினார்
முசிறி அருகே தாப்பேட்டை ஒன்றியம் மேட்டுப்பட்டி எல்லை கோவில், முத்தம்பட்டி, மேட்டுப்பட்டி, தும்பலம், பாப்பாபட்டி, சேர்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சார பயணத்தை அதிமுக வேட்பாளர் சந்திர மோகன் துவங்கினார். அப்போது பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் சந்திரமோகன் கூறுகையில், அரசு பெண்கள் கலைக் கல்லூரி அமைக்கப்படும் என கூறினார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, முன்னாள் அமைச்சர் என்.ஆர் சிவபதி அண்ணாவி, முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா சின்னசாமி உள்ளிட்ட பலர் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தனர்.