முசிறி: கைகாட்டியில் சிபிஎம் சார்பில் பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து தெருமுனைப் பிரச்சார கூட்டம்
முசிறி கைகாட்டியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து சிபிஎம் கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திராவிடர் கழகத்தினர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் கலந்து கொண்டு திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரம் செய்தார்.