திருச்சி: திருச்சியில் கஞ்சா விற்பனை: 22 வயது இளைஞர் கைது!
திருச்சி தொட்டிபாளையத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த அரனேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 10,500 ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.