ராசிபுரம்: தட்டான் குட்டை ஏரியில் கலக்கும் கழிவுநீர் - 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சந்திரசேகரபுரம் தட்டான் குட்டை ஏரியில் பாதாள சாக்கடை கழிவுகள் கலப்பதால் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக தீர்க்கப்படாத இப்பிரச்சனையால், விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து இடம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளனர்.