பண்ருட்டி: முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டிற்கு வருகை தந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து எம்பி சி.வி.சண்முகம் கேட்டறிந்தார்
பண்ருட்டி முன்னாள் எம்.எல்.ஏ சத்யாபன்னீர்செல்வம் வீட்டில் கடந்த மாதம் 28 ந்தேதி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை குறித்து, முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பண்ருட்டிக்கு நேரில் அவரது வீட்டிற்கு வந்து விபரம் கேட்டறிந்தார். அவருடன் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழிதேவன் எம்..எல்.ஏ., கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ. பாண்டியன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்