பண்ருட்டி: எழுத்தாளர் ராஜேந்திரசோழன் மறைவையொட்டி அவரது இல்லத்துக்கு சென்று புகழ் வணக்கம் செலுத்தினார் தவாக தலைவர் வேல்முருகன்
தமிழ் எழுத்துலகிற்கும், இலக்கியத்திற்கும் பல்வேறு பங்களிப்புகளை செய்த எழுத்தாளர் ராஜேந்திர சோழன் மறைவையொட்டி அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு நேரில் சென்று புகழ் வணக்கம் செலுத்தினார் தவாக தலைவர் வேல்முருகன். இத்தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.